• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாமக்கல் பள்ளிபாளையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 147 மிதிவண்டிகளும், கிருஷ்ணவேணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 256 முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கினார். பின்னர் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் ஆவரங்காடு எம்சிசி அருகில் சுமார் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்பு கூட கட்டுமான பணிக்கான பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன்,நகராட்சி ஆணையாளர் தாமரை,நகராட்சி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் நகராட்சி வார்டு உறுப்பினர்கள், என பலர் திரளாக கலந்து கொண்டனர்.