• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வரும் 12ம் தேதி குஜராத் முதல்வராக பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்

ByA.Tamilselvan

Dec 9, 2022

tamilselvan
குஜராத் முதலமைச்சராக பூபேந்திபடேல் மீண்டும் வரும் 12ம் தேதி பதவியேற்கிறார்.குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.குஜராத்தில் தற்போது முதல் அமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் வருகிற 12ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.