• Thu. Mar 27th, 2025

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிக்கான பூமி பூஜை

Byகுமார்

Feb 23, 2024

மதுரை மாநகராட்சியின் 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் உயர் மின்விளக்கு கம்பம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 ஐராவதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய மாமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டுவதற்க்கும் அதே பகுதியில் உயர் மின்விளக்கு கம்பம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா மாமன்ற உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.