பாவாணர் கோட்டம் பாசறையினர் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் பங்கேற்றார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்குச் சோழபுரம் முறம்பில் உள்ள பாவாணர் கோட்டம் பாசறையினர் நடத்திய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீ. ப. ஜெயசீலன் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவை பாவாணர் கோட்டத்தின் தலைவர் அ. இளங்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பாவாணர் கோட்டத்தில் நெறியாளர் பெரும் புலவர் மு. படிக்கராமு, .பாவாணர் கோட்டத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் புலவர் நெடுஞ்சேரலாதன், செயலாளர் வெற்றி குமரன், பொருளாளர் உலகநாயகன், தலைமை அறங்காவலர் தலைமையாசிரியர் இல.நிலவழகன், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குருசாமி, கணக்கு ஆய்வாளர் எ.அரசகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்நாடு அரசால் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற புலவர் கா. காளியப்பனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், புலவர் நெடுஞ்ச சேரலாதன் தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகத்தினருக்கும் விழா குழுவின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களும், பெரும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பேச்சுப் போட்டியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.