தேர்வில் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறவும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும், சென்னை ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரையில் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்
மேலும் மாணவர்கள், எதிர் காலத்தில் பாரத தேசத்தில் தேசப்பற்று மிக்க தலைவர்களாக வரவும், விஞ்ஞானம் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கி சாதிக்கவும், குழந்தைகளுக்கு சுவாசினி பூஜை பாலா பூஜை ஆகியவற்றை நடத்தினார். இதில் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற குழந்தைகள் நாக்கில் பாலா பீஜாட்சரம் சரஸ்வதி ஜீவாச்சரமும் குட்டி சூலாயுதத்தை தேனில் தொட்டு சுவாமிகள் எழுதினார். மேலும் அவர்களுக்கு குட்டி கதைகளைச் சொல்லி அருளாசியினையும், குழந்தைகள் தேர்வில் எழுதுவதற்காக பேனாவும் புத்தகங்களும் வழங்கினார்.