• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கூடுதல் விலைக்கு விற்கப்படும் பாரத் கேஸ் சிலிண்டர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனத்திடம் இருந்து மஞ்சூர் சுற்றுபட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வீட்டு உபயோக சிலிண்டர்கள் இறக்கும் பொழுது அதற்கான விலை 1115 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் கேஸ் நிறுவன ஊழியர்கள் கூடுதலாக 50, 60, 100 ரூபாய் வரை கூடுதலாக ஒரு சிலிண்டருக்கு பெறுகின்றனர்,.பொதுமக்கள் கூடுதல் பணம் தர மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் தாமதப்படுத்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாரத் கேஸ் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லாததால் கூடுதல் பணம் செலுத்தியே சிலிண்டர்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்