
இலங்கையிலிருந்து வெளியேறி அகதிகளாக நடுக்கடலில் தத்தளித்தவர்கள் வியட்நாமில் உள்ளனர் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்தாலும், நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பலர் இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்கின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையிலிருந்து அகதிகளா வெளியேறி நடுக்கடலில் தத்தளித்தவர்களை சிங்கப்பூர் கடற்படை காப்பாற்றி வியட்நாமில் கரை சேர்த்தது. கரை சேர்ந்த 303 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் முடிவு செய்துள்ளது. வாழவழி இல்லாத இலங்கைக்கு திரும்ப செல்வதை விட இறப்பதே மேல் என அகதிகள் கூறியிருக்கின்றனர். தங்களுக்கு அடைக்கலம் கேட்டு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
