பீட்ருட் -1/4கிலோ,
பனீர் -100கிராம்,
ஏலக்காய் -4
முந்திரிபருப்பு -6,
பாதாம் -7,
பால் -100மிலி,
சீனி -1/4கிலோ
நெய் -50கிராம்
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி, பின்னர் பால் ஊற்றி நன்கு வேகவைத்து சற்று ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்து அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், பாதாம், முந்திரி இவற்றை பொரித்து எடுத்து வைத்து கொண்டு, மீண்டும் நெய் ஊற்றி அரைத்த பீட்ரூட்டை போட்டு, உடன் சீனியையும் கொட்டி நன்கு கிளறி, பின் பனீர், ஏலக்காய், முந்திரி போட்டு கிளறி பரிமாறவும். பீட்ரூட் இரத்தத்தில் சிவப்ப அணுக்களை அதிகரிக்கும். 3 நாட்கள் வரை கெடாது.
பீட்ரூட் பனீர் அல்வா
