முடி உதிர்வைத் தடுக்க செம்பருத்தி சீரம்
தேவையானவை:
செம்பருத்திப் பூ- 3
தயிர்- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்
செய்முறை:
செம்பருத்திப் பூவின் இதழ்களைப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். அடுத்து தண்ணீர் முழுவதுமாகக் கலர் மாறியதும் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும். இந்த செம்பருத்தி சீரத்தினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.