• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Aug 17, 2022

குளிர்கால சரும பராமரிப்பு:

குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் புத்துணர்ச்சியாக இருப்பதில்லை. மேலும் முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. ஆகவே முடிந்த வரை வீட்டிலேயே அவற்றைப் போக்க முயற்சியுங்கள்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை கலந்து தினமும் குளிப்பதற்கு கால் மணி நேரம் முன் உடலில் பயித்தம் மாவு அல்லது கடலைமாவு தேய்த்து குளித்தால் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். வெள்ளரிக்காயை சிறிது பாலுடன் கலந்து அரைத்து அதனை பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் நிறமும் கூடும்.
பாதாம் பொடி, ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். வெயிலில் சென்று வந்தால் முகம் கறுத்துவிடும். அவர்கள் மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். நிறம் மெருகேறும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.