• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Jun 26, 2023

முடி அடர்த்தியாக வளர:

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் இந்த முறையில் நீங்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது ரிசல்ட் வேற லெவலில் இருக்கும்.

முதலில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். மூன்று வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கத்தரித்து அதில் இருக்கும் எண்ணெயை சேருங்கள். இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நீங்கள் கலந்து வைத்துள்ள எண்ணெய் பாத்திரத்தை அதில் கொண்டு போய் வையுங்கள். தண்ணீர் கொதித்து பாத்திரத்தில் இருக்கக்கூடிய எண்ணெயும் கொதிக்க வேண்டும். இதை டபுள் பாய்லிங் முறை என்று கூறுவார்கள்.

மிதமான சூட்டில் இந்த எண்ணெயை நீங்கள் இரவு தூங்கும் முன்பு மசாஜ் செய்து விட்டு தூங்க வேண்டும். மறுநாள் தலைக்கு எப்பொழுதும் போல நீங்கள் குளித்துக் கொள்ளலாம்.