

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2 கப்
ரோஸ்மேரி இலைகள் – 2 ஸ்பூன்
வெந்தய விதைகள் – 1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இதில் வெந்தயத்தையும், ரோஸ்மேரி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்ட பிறகு ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
வெந்தயம், ரோஸ்மேரி இரண்டுமே தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டக் கூடியவை. முடியை பளபளப்புடனும் பட்டு போன்று மென்மையாகவும் வைத்திருக்கச் செய்யும். இந்த டானிக்கை 4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
