• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி – நெல்சன் அறிவிப்பு!..

Byமதி

Oct 7, 2021

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு, அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நிறைவடைந்தது. இந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதோடு, தெலுங்கிலும் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் வெளியாகிறது.

இதனால், இன்று ஹைதராபாத்தில் சிவகார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்டோர் படத்தின் புரொமொஷனுக்காக சென்றிருந்தனர். அங்கு தொகுப்பாளினி ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டதற்கு “டாக்டர் படம் வெளியானபிறகே ‘பீஸ்ட்’ அப்டேட் வரும்” என்று கூறியுள்ளார் நெல்சன்.

’பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானபிறகு இதுவரை எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை படக்குழு. அதற்குள், ’விஜய் 66′ படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.