கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் டாக்டர். இது நாளை வெளியாக உள்ளது.
உடல் உறுப்புகளை திருடி விற்க்கும் கதைப் பின்னியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது.
நாளை வெளியாகும் இந்தப் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை 25 கோடிகளுக்கு சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இதில் சேட்டிலைட் உரிமை 12 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 13 கோடிகளுக்கும் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.