2020-ம் ஆண்டு இந்திய அளவிலான குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் 61,767 வழக்குகள் சூழலியல் சார்ந்த குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 78.1% அதிகம் என்பது அதிர்ச்சிகரமானது.
சூழலியல் சட்டங்களின்கீழ் பதிவு செய்யப்படும் ஐந்து வழக்குகளில் 80.5% அதாவது நான்கு சிகரெட்டு மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஒலி மாசு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் இடம்பிடித்திருக்கின்றன. வனச் சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2,287, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏறக்குறைய 672 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் சூழலியல் சட்டங்களின்கீழ் கடந்தாண்டு 42,756 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2019-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
இதில் சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் மட்டும் 42,731 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் சுமார் 9,543, உத்தரப்பிரதேசத்தில் 2,981 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.