• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் ‘ஜாலியோ ஜிம்க்கானா’ என புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்க்கானா’ பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கு.கார்த்திக் வரிகளில் விஜய் பாடியுள்ளார். இதற்கான முன்னோட்ட வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.