• Wed. Dec 11th, 2024

அனிருத் என்கிட்ட ரொம்ப கவலை பட்டாரு – மாளவிகா மோகனன்!

பேட்ட படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்! சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தனக்கு கால் செய்து ரொம்ப feel பண்ணி பேசியதாக கூறியுள்ளார் .

இசைஅமைப்பாளர் அனிருத்தும் மாளவிகா மோகனனும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். மாளவிகா விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்திருந்தார்! மாஸ்டர் லாக்டவுன் காரணமாக கொஞ்ச காலம் ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது லாக் டவுனில் மாளவிகா மோகனனுக்கு அனிருத் கால் செய்து இப்படி ஆயிடுச்சே .. எல்லாம் சீக்கிரம் சரியாகி பழையபடி பட வேலைகளை பார்க்க வேண்டும் என மாளவிகா மோகனனிடம் அனிருத் feel செய்து பேசியதாக நேர்காணல் ஒன்றில் மாளவிகா பகிர்ந்துள்ளார்.