• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுக அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டுகள் சேகரித்த கடற்கரைராஜ்..,

ByK Kaliraj

Apr 4, 2026

விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செவல்பட்டி, அம்மையார் பட்டி, அன்ன பூரணியாபுரம் சக்கமாள்புரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, செவல்பட்டி காசி துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் சமுதாய பெரியோர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறினார்கள்.

தொடர்ந்து கிராம பகுதியில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தனர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு ஓட்டுகள் சேகரித்தனர்.

சமுதாய பெரியோர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.