

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் இரவு விருந்து மேற்கொண்டார்.
நேற்று கொல்கத்தா சென்ற அமித்ஷா, கங்குலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது காரை சுற்றி பொதுமக்கள் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா வணக்கம் தெரிவித்தார். பின் கங்குலியின் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இரவு விருந்தில் கலந்துகொண்டார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், இந்த விருந்துக்கு அரசில் காரணங்கள் எதுவும் கிடையாது. அமித்ஷாவை எனக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். ஏற்கனவே பல முறை சந்தித்திருக்கிறோம். அவரது மகன் பிசிசிஐ செயலாளராக இருப்பதால் அதன் அடிப்படையில் வீட்டிற்கு வருகை தந்தார். அவர் ஒரு சைவ உணவு மட்டுமே உண்பார் என தெரிவித்தார்.

