

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பில் தொகுதி மக்கள் மீனவர்கள் உட்பட எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் பாராளுமன்றத்தில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து பழங்குடியின பட்டியலில் மீனவர்களை சேர்க்க பாராளுமன்றத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் குரல் கொடுத்து மக்கள் திட்டங்களை வாங்கி தருவேன் என்று உறுதி அளித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

