நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அதுபோல் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், குறிப்பாக மே 24-ஆம் தேதி ஆனால் வெப்பம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை உயரும். இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயில் காலத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை தேவையில்லாமல் குழந்தைகள் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. தர்பூசணி, நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வேலூரில் பதிவானது குறிப்பிடத்தக்கது.