• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வங்கி ஊழியர்கள்..!

Byவிஷா

Oct 21, 2023

நவராத்திரியை முன்னிட்டு மும்பையில் உள்ள ஆக்சஸ் வங்கியின் ஊழியர்கள் அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வசந்த பஞ்சமி, ஹோலிப்பண்டிகை மற்றும் நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது இரவுகளிலும் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. பெண்ணின் தெய்வீக வடிவமான துர்க்காதேவியை மையாக வைத்து, ஒன்பது சக்திவடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன கர்பா பாடல்கள் இசைப்படும்.
மும்பையில் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக மும்பையில் உள்ள ஆக்சஸ் வங்கி ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் கர்பா நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். வீடியோவில் ஊழியர்கள் அனைவரும் மிகுந்த நலினத்துடன் ஆடுகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கமெண்டுகளில் ஹார்டீன் பறக்கவிட்டு வருகின்றனர்.

https://x.com/RitaSinghal6/status/1714911557715640728?s=20