தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், பலரும் தீபாவளியைக் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சேர்ந்துக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தூத்துக்குடியில், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை தங்களது ரயில் பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடாது என துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஒலிபெருக்கி மூலம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தடை செய்யப்பட்ட பட்டாசு உள்ளிட்ட வெடிப்பொருட்களை ரயில் மூலம் கடத்திச் சென்றாலோ எடுத்துச் சென்றாலோ அவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை
