• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 2023 வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை

Byகாயத்ரி

Sep 7, 2022

இந்தியாவில் பல நகரங்களில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டெல்லி மாறி வருகிறது.

இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்த வாகன போக்குவரத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால்ராய் “டெல்லியில் இந்த முறை ஆன்லைன் மற்றும் நேரடி பட்டாசு விற்பனைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. பட்டாசு விற்கவும், வெடிக்கவும் ஜனவரி 1, 2023 வரை தடை விதிக்கப்படுகிறது. இதைஅமல்படுத்த டெல்லி போலீஸ் மற்றும் மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் குழு செயல் திட்டம் வகுக்கப்படும். டெல்லியை மாசு அபாயத்திலிருந்து காப்பாற்ற அனைத்து வகையான பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.