• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முதல்வரிடம் கோரிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்பட்டவில்லை. மாணவர்கள் ஏன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர் என்பதை பற்றியும் விளக்கம் கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் முதல்வரின் கவனதிற்க்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யக் கோரி கேட்டுக்கொள்ளபட்டுள்ளது. அதுமட்டுமின்றி நீட் தேர்வு முறையாக நடைபெற்றவில்லை என்பதற்கு மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற மோசடி உதாரணம் என்றும் கூறினார்.