• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

ByKalamegam Viswanathan

Jun 8, 2023

கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

யாகசாலை நிகழ்ச்சிகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்று தீப ஆராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலைத்துறை இன்ஸ்பெக்டர் இளவரசி, நிர்வாக அதிகாரி இளமதி, ஆலய பணியாளர்கள் பூபதி ,வசந்த், கோவில் அர்ச்சகர், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.