• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின்…

Byமதி

Oct 28, 2021

கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனு பலமுறை விசாரணைக்கு வந்த நிலையில் 21 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கானுக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோக்தகி வாதாடிய நிலையில் தற்பொழுது மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆர்யன் கானிடம் இருந்து நேரடியாக எந்த போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை முக்கிய வாதமாக ஆர்யன் கான் தரப்பு நீதிமன்றத்தில் வைத்தது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் கொடுத்தால் வெளிநாடு தப்பிச்சென்றுவிடுவார் எனப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முக்கிய சாட்சியான கிரண் கோஸாவி கைது செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.