• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடியை சிறப்பிக்கும் படவேட்டம்மன் பாடல்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக வெளியாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார்.சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குநர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைக்க, வளர்ந்து வரும் இளம் திரைப்பட நடிகை ஹரினி இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலை குணசேகரன் இயக்கியுள்ளார்.
பிரபல இசை நிறுவனமான சிம்பொனி மியூசிக் வெளியிடும் ‘படவேட்டம்மன்’ வீடியோ பாடல் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சிசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லேன்டெர்னில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஏ.ஆர். ரமேஷ், மூத்த பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், சிம்பொனி மியூக் நிறுவனத்தின் CEO ஸ்ரீ ஹரி – விகேஷ் மற்றும் இசை ஆல்பத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி பேசுகையில், “இந்த பாடலை பார்த்ததும் இது 80, 90 களில் எடுக்கப்பட்ட பாடல் போன்று தெரிந்தது. அதற்கு காரணம் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருந்தது. மிக அழகான வரிகளை முத்துக்குமார் எழுதியுள்ளார்.
ரேணுகா அம்மாவின் வரலாற்றை சொல்லும் விதமாக, தனக்கு இட்ட கட்டளையாக சுனில் தயாரித்திருக்கும் இந்த வீடியோ இசை பாடல் ஏழு சுரங்களாகவும், எட்டு திசைகளிலும் வலம் வரும். இந்த பாடலை பெண்கள், பக்தர்கள் காது கொடுத்து கேட்பார்கள் தன்னிலை மறப்பார்கள், இந்த பாடல் பெரிய வெற்றி பெறும் என்று நான் சொல்வது மக்கள் குரல் அல்ல, மகேஷன் குரல் என்றார்
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசுகையில், “நான் அம்மனின் தீவிர பக்தன். மாதா மாதம் திருவேற்காடு கோவிலுக்கு சென்று வருவேன். அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன். எம்.ஜி.ஆர் இருந்தவரை இது தொடர்ந்தது. நான் அம்மனின் செல்ல பிள்ளை. இந்த படவேட்டம்மன் பாடல் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாடலில் நடனம் ஆடிய ஹரினியும், அம்மனும் ஒன்றாக இருந்தார்கள். நான் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாடல் வரிகளும், இசையும், பாடிய விதமும் சிறப்பு.தயாரிப்பாளர் சுனில் நல்ல மனிதர், பாடலை மிக சிறப்பாக தயாரித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவருடைய மனைவி மும்தாஜ் இருந்திருக்கிறார். மும்தாஜ் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவர் படவேட்டம்மன் பாடலை தயாரித்திருக்கிறார். இதற்காகவே இவர்களை நாம் பாராட்ட வேண்டும். சுனில், மும்தாஜ் மற்றும் அவர்களுடைய மகள்கள் என அவர்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக படவேட்டம்மன் ஆசியுடன் வளமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.