• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு.., மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் மனு…

Byகுமார்

Dec 13, 2023

மதுரையில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கபடுவதாக மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் அளித்து உள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட விளாங்குடி பகுதியில் அரசு ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது என மாநில பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் வீரமுத்து உள்பட ஏராளமான நிர்வாகிகள் மதுரை ஆட்சியரிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வீரமுத்து கூறியது. இந்த இந்தப் பள்ளி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வருகிறது. ஆனால் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினர் செல்லூர் ராஜீ இந்த பள்ளிக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும்,
இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்ற கழிப்பறை சுகாதார மற்று உள்ளது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கபடுவதாகவும் குற்றசாட்டு எழுந்து உள்ளது. இதை தவிர பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து துன்புறுத்தி மதமாற்றம் செய்கின்ற முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது எனக் கூறினார்.