• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் புதிய நியாய விலைக் கடையை, மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தனர்…

ByP.Thangapandi

Dec 12, 2023

உசிலம்பட்டி அருகே கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையை – மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் இணைந்து திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தில் ரேசன் கடை இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராஜக்காபட்டி கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாகவும், புதிய ரேசன்கடை அமைத்து தர கோரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இந்த கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டது, இந்த கட்டிடத்தை இன்று மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி, கிராம மக்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.