• Sat. Apr 27th, 2024

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

May 4, 2023

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலாமாண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு /அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌ / அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌ / அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளால்‌ ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023- 24 ஆம்‌ கல்வியாண்டில்‌ சேர்க்கை பெற இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்‌டுள்ளது.
மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யவேண்டும்‌.இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க எதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌- TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய நாளை முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணவிக்கலாம்:
பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்‌ டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாக பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌, ” “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்‌.கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250. கலந்தாய்வு விவரங்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணாக்கர்கள்‌ மேற்காணும்‌ இணையதள வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளலாம்‌.
‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்‌.
மேற்கண்ட அசல்‌ சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது எதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும் மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பப்படும்‌ குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெறும்‌.பி.இ./ பி.டெக். (Lateral Entry and Part Time) பட்டப் படிப்பு‌ சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர்‌ வெளியிடப்படும்‌. தொடர்பு எண்‌: 044 – 2235 1014 / 1015,அழைப்பு எண்‌: 1800 – 425 – 0110,இ- மெயில் முகவரி: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *