பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவினைக் கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார். கணினி அறிவியல் இணை பேராசிரியர் முனைவர் ராமராஜ் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து உடல் நலமும் மன நலமும் என்ற தலைப்பில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அமுதா பிரசாத், யோகா குறித்த பல்வேறு கருத்துக்களையும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து தன்னம்பிக்கை உரையாற்றினார்.

பதில் பருவ மாணவர்களின் பிரச்சனைகளும் ஆலோசனைகளும் என்ற தலைப்பில் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குறிப்பாக போதைப்பொருள் குறித்த தகவல்களும் அதன் விளைவுகளும், பருவ வயதில் ஏற்படுகின்ற உடல் மாற்றங்கள் மற்றும் தவறான புரிதல்கள், வளர் இளம் பெண்கள் மாற்று ஆண்களுக்கான சிறப்பு ஆலோசனைகள் குறித்த செய்திகளை கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் பழனிவேல் ராஜா உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் கணிதத்துறை பேராசிரியர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் கல்லூரி பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செழியன் நன்றி கூறினார்.