தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இருந்து ஃபாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா திருமண மண்டபம் வரை மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை செயற்பொறியாளர் லட்சுமி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் பொதுமக்கள் மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு தேனி தொழிற் பயிற்சி நிலைய மாணவ மாணவியர்கள், மின்வாரிய ஊழியர்கள் அலுவலர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து அன்னப்பராஜா திருமண மண்டபத்தில் முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் EE ஜென்ரல் ரமேஷ் குமார் EE தேனி சண்முகா ADE ரூரல் தேனி முருகேஸ்பதி ADE டவ் தேனி செந்தில்குமார் பெரியகுளம் EE பால பூமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் ADE ராசிங்கபுரம் பிரபு தலைமையிலான குழுவினர்கள் சார்பில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய அலுவலர்கள் ஊழியர்கள் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




