• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

BySeenu

Jan 2, 2025

கோவையில் மின் சிக்கனம் குறித்து, மின்சார வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட மின்சார வாரியம் சார்பில் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பேரணி மேற்கொள்ளப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முடிவடைந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மின்சார வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் மின் சிக்கனம் குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் மின் சிக்கனம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.