அரியலூர் மாவட்டம் ,செந்துறையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்”போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணிக்கு அரியலூர் மாவட்டத்தலைவர் செ.ஜெயராமன் தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்டச்செயலாளர் ஆ.சண்முகம் வரவேற்றார்.

பள்ளி மாணவ மாணவியர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியினை செந்துறை வருவாய் வட்டாட்சியர் பெ.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். செந்துறை
வட்டார வளர்ச்சி அலுவலர் இ .முருகன், செந்துறை காவல் ஆய்வாளர் க. குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இவ்விழிப்புணர்வு பேரணி செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில் துணைப் புரவலர்கள் சகானா காமராஜ் , ஆயுள் உறுப்பினர் சடையப்பன் பேரணியில் வாகன பிரச்சாரம்மேற்கொண்டனர்.முன்னதாகஇந்நிகழ்வில் விழிப்புணர்வு கருத்து களை ஜூனியர் ரெட் கிராஸ்மாவட்ட கன்வீனர் சி.சிவசங்கர்வழங்கினார்.
இந்நிகழ்வில் செந்துறை காவல்உதவிஆய்வாளர் .தேவேந்திரன்,செந்துறை .வருவாய்த்துறை ஆய்வாளர் தங்க மணி,கிராம நிர்வாக அலுவலர் சித்ரா ,நியமனத் துணைத் தலைவர் அட்வகேட் செல்வராஜ், நிர்வாக குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, சிவமூர்த்தி, மோகன்ராஜ், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கள்மோகன்_,பாரதி,புரவலர்கள்,துணைப்புரவலர்கள், நிர்வாக குழு உறுப்பின ர்கள், ஆயுள் உறுப்பினர் கள்,செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, வெற்றி விநாயகா மேல் நிலைப் பள்ளி, புனித தெரசாள் மேல்நிலைப் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)