
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில்,நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை ,மட்காத குப்பை, என பிரித்து வழங்க வேண்டி இராஜபாளையம் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சட்டமன்ற உறுப்பினர்.தங்கபாண்டியன் கொடி அசைத்தும் சாலையை தூய்மைப்படுத்தியும் தொடங்கி வைத்தார்.
அதேபோல் செட்டியார்பட்டி பேரூராட்சியில் பாலித்தின் பயன்பாட்டை தவிர்த்துவிட்டு மஞ்சள் பையை மக்கள் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. செட்டியார்பட்டி காய்கறி மார்க்கெட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று மஞ்சள் பை வழங்கினார்.
இவ்விழாவில் பேசியசட்டமன்ற உறுப்பினர் இந்தியாவிலேயே முதல் தூய்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுகிறவர் நமது தமிழக முதல்வர் தான்.அவர் வழியில் என்றும் நடப்போம், நாம் இருக்கும் இடத்தை தூய்மையான இடமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்போம்.இவ்விழாவில் நகர செயலாளர் ராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஏ.எஸ்..ஷியாம் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார் வேல்முருகன், நகராட்சி துணை சேர்மன் கல்பனா குழந்தை வேலு ,நகராட்சி ஆணையாளர் ,நகராட்சி அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், செட்டியார்பட்டி சேர்மன் ஜெய முருகன் துணை சேர்மன் விநாயக மூர்த்தி செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன், பேரூராட்சிஇஓ, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,வார்டு செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
