• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByG.Suresh

Dec 1, 2023

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியில், மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், இதன் மூலம் தங்களுக்கான உரிமைகளையும் சலுகைகளையும் பெற வாய்ப்பாக அமையும். எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வேண்டுகோள் ஆட்சியர் விடுத்தார்.