தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளியில் ஒரத்தநாடு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.சஞ்சய் தலைமை வகித்தார். ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.செல்வம், முன்னனி தீயணைப்பு அலுவலர் ம.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வெடி வெடிக்கும் முறைகள் பற்றியும், வீடு மற்றும் பணிபுரியும் இடங்களில் எதிர்பாரதவிதமாக ஏற்படும் தீ விபத்தில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் நீர் நிலைகளில் குளிக்க செல்லும் போது பெரியவர்களின் துணையோடுதான் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.











; ?>)
; ?>)
; ?>)