திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்த என் .எஸ். எஸ். முகாமில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் ஞானசீலா தலைமை வகித்தார்.

பள்ளி ஆசிரியர் அரியநாயகம் அனைவரையும் வரவேற்றார். இதில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம், உதவி அலுவலர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் நிலைய தீயணைப்பு அலுவலர் பொன்னம்பலம் பேசியதாவது: இந்த உடல் உட்பட அனைத்து பொருட்களுமே எரியக்கூடியவை. நாம் தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பு உபகரணங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பாற்றி உதவ வேண்டும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் தீப்பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். மின்சார வயரில் , ஏ.சி மிஷினில் தீ பிடிப்பது, உட்பட பலவற்றில் தீப்பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் செய்முறை மூலம் செய்து காட்டினேன்.

மாணவர்கள் தீ பிடிப்பதை தடுப்பது குறித்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும். தீ மற்றும் வெப்பத்தை தணிக்க தண்ணீர் ஊற்ற வேண்டும். மற்றவர்களையும் தம் உயிர் போல் பாவித்து உதவ வேண்டும். காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உதவி அலுவலர் சாமிநாதன் பேசியதாவது: மாணவர்களின் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கவர்களை காப்பாற்ற தலை முடியை பிடித்து நாம் இழுக்க வேண்டும். குடிநீர் பிளாஸ்டிக்களை கட்டிக்கொண்டு சிறுவர்கள நீச்சல் பழக வேண்டும். நீச்சல் சிறந்த உடற்பயிற்சி என்பதை நீங்கள் அறிய வேண்டும். என்றார். பின்பு மாணவ, மாணவிகளுக்கு தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செய்து காட்டினர்.




