• Wed. Apr 23rd, 2025

அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு

அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு மூன்று நாட்கள் மாநாடு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற அகில இந்திய சித்த, பாரம்பரிய மருத்துவர்கள் பங்கேற்ற மாநாடு இன்று மாலை (ஜனவரி 25)மாலை நிறைவடைந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர்கள் இந்த மூன்று நாட்கள் மாநாட்டில் பங்கேற்ற பாரம்பரிய மருத்துவர்கள் ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டனர்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று அவர்களின் பல்வேறு மருந்துகள் உடைய ஸ்டால்களை திறந்திருந்தார்கள்.

மாநாட்டின் நிறைவு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று உரையாற்றிய போது..,

குமரி மாவட்டம் சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் நிறைந்த பகுதி. அவரது பாட்டனாரும் ஒரு வைத்தியரே என்பதை மாநாட்டில் தெரிவித்தார்.

இன்றைய ஆங்கில மருத்துவம் என்பது நோய் பாதிக்கப்பட்டவர்களை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று பணம் பறிக்கும் நிலையில் உள்ளது தான் வேதனை என தெரிவித்தவர் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள வேறுபாடுகளை துல்லியமாக எடுத்துரைத்தார்.

அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் குமரி மாவட்டம் பாரம்பரிய வைத்தியர்கள் அமைப்பின் சார்பில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்வின் மூன்று நாட்கள் நிகழ்விற்கு உடன் இருந்து உழைத்த அனைவருக்கும், மாநாட்டு குழு தலைவர் மருத்துவர் குமரேசன் சிறப்பு சான்றிதழ்கள் உடன் நினைவு பரிசும் வழங்கி கெளரவித்தார்.

மாநாட்டில் 10_தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது

பாரம்பரிய சித்த மருத்தவர்களுக்கு நலவாரியம் அமைத்து சிறப்பு நலத்திட்டம் அமைத்து தரவேண்டும். சித்த மருத்துவ மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்து தரவேண்டுகிறோம் என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.