விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் முத்தாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பட்டாசு விபத்தில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.