தாம்பரம் 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் யாக்கூப், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் 3000 ரூபாய் வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள 3000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் திட்டம் தமிழகமெங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாம்பரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆலந்தூரில் 2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் நேரடி காணொளி ஒளிபரப்பை, தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு, 5வது தெருவில் உள்ள நியாய விலை கடை முன்பு, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தாருக்கு, நியாய விலை கடை அதிகாரிகளுடன் இணைந்து தாம்பரம் ஐம்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் யாக்கூப், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் 3000 ரூபாய் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களின் அவசர மருத்துவ சேவைக்காக 225வது அவசர ஊர்தி சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், நியாய விலை கடை பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மக்களை நேரடியாக சென்றடையும் அரசின் நலத்திட்டங்களும், சமூக சேவை அமைப்புகளின் பங்களிப்பும் ஒருங்கிணையும் இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




