விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிறு குளம் கண்மாய் அருகில் விஸ்டம் பள்ளி மற்றும் அம்மன் கோவில்பட்டி அரசினர் தொடக்கப்பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க கூடாது பட்டாசு வெடிக்கும் போது கதர் ஆடை அணிய வேண்டும் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் பேசினார்.

தீயணைப்பு வீரர்கள் பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.