இராமநாதபுரத்தில் அனைத்து சமூக மக்களுக்காக கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில் 2020-2021 தன்னலம் பாராமல் பிறர் உயிரை காத்து மனிதநேய சேவை செய்த இராமநாதபுரம் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.


உயிரை துச்சமென மதித்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கு உணவு, இரத்த தானம் மருத்துவ சேவை ஆற்றி மனிதநேய சேவைகள் செய்திட்ட தமுமுக தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் மனிதநேய விருதை தமுமுக மாநிலச்செயலாளர் எஸ் சலிமுல்லாஹ்கான், இராமநாதபுரம் தமுமுக மாவட்ட தலைவர் சரிபு, தமுமுக மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கலந்தர்ஆசிக், மாவட்ட பொருளாளர் சபிக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சுலைமான், சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் அப்துல் வாஜித், மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் அபுல் பகத் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா சுகுபுதீன், இராமநாதபுரம் நகர தலைவர் அப்துல் ரஹீம், தமுமுக நகர செயலாளர் முஹம்மது தமீம், மமக நகர செயலாளர் முஹம்மது அமீன்,நகர பொருளாளர் மைதீன் கனி, இராமநாதபுரம் நகர் ஆம்புலன்ஸ் மருத்துவ அணி அர்சத்- நூருல் ஹக் மன்சூர். நபிஸ். சங்கர்,புவனேஸ்வரன், நிர்வாகிகள் பெற்றுக் கொண்டார்கள்.
