மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மற்றும் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக, கண்ணதாசன் 97-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அரசுபொதுத்தேர்வுகளில், பத்து, பதினொன்று வகுப்புகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த விழாவிற்கு, திருவள்ளுவர் இலக்கியமன்ற செயலாளர் முனைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தங்கராஜ், வழக்கறிஞர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித்
தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் விஜய ரெங்கன் வரவேற்றார். கண்ணதாசன் இலக்கிய பேரவைத்தலைவர் கவிஞர் பொன்.பனகல் பொன்னையா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.
இந்த விழாவில், அரசுபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தலைவர் தனபாலன், தலைமை ஆசிரியர் திலகவதி ஆகியோர் நுhல்கள் பரிசுகளாகவழங்கினார். இதில், மன்ற நிர்வாகிகள் கச்சைகட்டி பாபு, ஆகாஸ் மகாலிங்கம், கனினிஆசிரியர் கார்த்திக், உடற்கல்விஆசிரியர் சந்திரமோகன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி
தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.
வாடிப்பட்டியில், அரசுபொதுத்தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
