• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏப்.24ல் மாணவர்களுக்கு இடையிலான கையெழுத்துப் போட்டி

Byவிஷா

Apr 18, 2024

வருகிற ஏப்ரல் 24ஆம் தேதியன்று, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழில் அழகாக எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு இடையிலான கையெழுத்துப் போட்டி நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழில் அழகாக எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கையெழுத்து போட்டி மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரியில் ஏப். , 24 காலை 10.00 மணிக்கு நடக்கிறது. ஒரு கல்லூரியில் இரு மாணவர்கள் வீதம் முதல்வரின் பரிந்துரை கடிதம், அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம்.
ஒருமணி நேர போட்டிக்கு எழுதுதாள் வழங்கப்படும். தமிழ்ப்பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை 9.00 மணிக்கு பேராசிரியர் முத்துராணியிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.