• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று இரவு கோவில் முன்பு திருவிழாவிற்கான செவ்வாய் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் இன்று காலை முதல் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர் 28ஆம் தேதி திங்கட்கிழமை இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜையும் 29ஆம் தேதி காலை வைகை ஆற்றிற்கு சென்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாலை வைகை ஆற்றிற்கு சென்று கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அன்று இரவு முளைப்பாரி போட்டிருக்கும் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு கும்மி பாட்டு பாடும் நிகழ்ச்சியும் 30ஆம் தேதி புதன்கிழமை இரவு மாவிளக்கு எடுத்து ஊர்வலமும் கிராமத்தின் சார்பில் இரவு நாடகம் அல்லது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை கோவிலில் இருந்து முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று திருவிழா நிறைவு பெற உள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலக்கால் ஊராட்சி சார்பில் சுகாதார ஏற்பாடுகளையும் காடுபட்டி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.