• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு!

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வராஜ்(45) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சுனிதா. மது பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், இவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து சூளேஸ்வரன்பட்டியில் தனியாக தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் செல்வராஜ்.

இந்நிலையில் சூளேஸ்வரன்பட்டியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே ஆட்டோவில் வந்த செல்வராஜ் பெட்ரோல் கேனை எடுத்து ஆட்டோவிலேயே தன் மேல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். ஆட்டோவுடன் தீப்பற்றி எரிந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து செல்வராஜை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே, சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.