மதுரை விமான நிலையம் செல்லும் சாலை உள்ள விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த மூக்கையா தேவர் மகன் முனீஸ் (வயது 26) ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் நின்று கொண்டிருந்தார்.

பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் முனிஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் திடீரென கையில் இருந்த கத்தி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் விமான நிலையம் செல்லக்கூடிய சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
முனிஸின் உறவினர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விமான நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து உடலை எடுக்கஎதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த நான்கு நாளைக்கு முன்பு மாலை அணிவித்து பழனிக்கு பாதையாத்திரை சென்று இன்று வந்த மாலை வீட்டிற்கு வந்த நிலையில் முனிஸை கொலை செய்துள்ளனர்.
அவனியாபுரம் போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
முனிஸ்வரன் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து கொலை செய்து தப்பிய ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.




