• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி ஆட்டோ டிரைவர் சாவு

ByKalamegam Viswanathan

May 5, 2023

சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் மயங்கி விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மதுரை வடக்கு மாசி வீதி நல்ல மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து 56. இவர் ஆட்டோ டிரைவர். குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வைகை ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து மகிழ்ச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோடிரைவர் சுடலைமுத்துவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.